மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

பொதுப்பணித் துறை அலுவலகம் முன் ஊழியர்கள் தர்னா

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி பொதுப்பணித் துறை அலுவலகம் முன் அரசுப் பணியாளர்கள் நல கூட்டமைப்பு சார்பில் தர்னா போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :26 ஜூன் 2018, 9:26 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி பொதுப்பணித் துறை அலுவலகம் முன் அரசுப் பணியாளர்கள் நல கூட்டமைப்பு சார்பில் தர்னா போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
 புதுவை பொதுப்பணித்துறையில் பணியாற்றும் ஆயிரத்து 311 தற்காலிக ஊழியர்களுக்கு வழங்கப்படும் 16 நாள்கள் வேலையை 30 நாள்களாக உயர்த்தி வழங்க வேண்டும், மத்திய அரசின் குறைந்தபட்ச சட்டக்கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ.398 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், தற்காலிக ஊழியர்களை முழுநேர தினக் கூலி ஊழியர்களாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும், நிலுவையில் உள்ள 14 மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
 அரசு பணியாளர் நல கூட்டமைப்புத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஆறுமுகம், குமரராஜ், அசோக்குமார், தேவநாதன், முருகன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.