தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

திமுக சார்பில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்

நெட்டப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலவேம்புக் குடிநீர் விநியோகிக்கும் நிகழ்ச்சியை புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்

Updated On :5 நவம்பர் 2018, 8:53 am IST

நெட்டப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலவேம்புக் குடிநீர் விநியோகிக்கும் நிகழ்ச்சியை புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.
 புதுவை தெற்கு மாநிலத்துக்கு உள்பட்ட 12 தொகுதிகளில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்த கையேடுகள், துண்டறிக்கைகள், நிலவேம்புக் குடிநீர் வழங்குதல், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
 அதன் ஒரு பகுதியாக நெட்டப்பாக்கம் தொகுதி திமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை அந்தத் தொகுதி முழுவதும் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. நெட்டப்பாக்கம் பிரதான சாலையில் தொடங்கிய நிகழ்ச்சிக்கு பொதுக்குழு உறுப்பினர் மருத்துவர் மாயக்கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
 மாநில பொருளாளர் சண்.குமரவேல், மருத்துவர் அணி அமைப்பாளர் முத்துக்குமரன், தொகுதி செயலர் வெங்கடாஜலபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், தொகுதி துணைச் செயலர்கள் பூபதி, மங்கையர்கரசி, மாநில பிரதிநிதிகள் திருமாறன், செல்வம், நிர்வாகிகள் அண்ணா, மணிவண்ணன், ராமமூர்த்தி, தாண்டவராயன், மகாதேவன், குமாரசாமி, அசார், சங்கர், தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.