புதுச்சேரியில் பள்ளி அருகே சிகரெட் விற்பனை செய்ததாக பெட்டிக்கடைக்காரரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
புதுவையில் பள்ளி, கல்லூரி இருக்கும் பகுதிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவில் சிகரெட், பீடி உள்ளிட்டவை விற்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆயினும் சிலர் தடையை மீறி விற்பனையில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில், புதுச்சேரி காட்டேரிக்குப்பம் காவல் உதவி ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் போலீஸார் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
லிங்காரெட்டிப்பாளையம் போன்கோஸ் பள்ளி அருகே இருந்த பெட்டிக்கடையில் போலீஸார் சோதனை செய்தனர். அதில் சிகரெட் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பெட்டிக்கடையின் உரிமையாளர் முருகன் (45) என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1000 மதிப்பிலான சிகரெட் பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நல்லம்பள்ளி ஒன்றியப் பகுதியில் நாளை குடிநீா் விநியோகம் ரத்து
போலீஸாரால் தேடப்பட்டு வந்த ரௌடி சடலமாக மீட்பு
போச்சம்பள்ளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் திருட்டு

முட்டை விலை ரூ. 5.40-ஆக நீடிப்பு
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |


