
வாகனங்களுக்கான பேன்ஸி பதிவெண்களுக்கு செப். 19-இல் ஏலம்
புதுவையில் வாகனங்களுக்கான பேன்ஸி பதிவெண்கள் செப். 19 -இல் ஏலம் விடப்படும் என்று புதுவை போக்குவரத்துத் துறை ஆணையர் சிவக்குமார் தெரிவித்தார்.
புதுவையில் வாகனங்களுக்கான பேன்ஸி பதிவெண்கள் செப். 19 -இல் ஏலம் விடப்படும் என்று புதுவை போக்குவரத்துத் துறை ஆணையர் சிவக்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை போக்குவரத்துத் துறையின் பேன்ஸி வாகனப் பதிவு எண்களை ஏலம் எடுக்க PY-05 F (உழவர்கரை) https://parivahan.gov.in/fancy என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இந்த ஏலத்தில் பங்கு பெறுவதற்குத் தேவையான பெயர் (யூசர் நேம்) மற்றும் கடவு எண்ணை https://parivahan.gov.in/fancy என்ற இணையதளத்தில் "நியூ பப்ளிக் யூசர்' மூலமாக செப். 18-ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட பெயர் மற்றும் கடவு எண்ணை வைத்து ஒன்றுக்கும் மேற்பட்ட எண்களுக்கான பதிவை செய்து கொள்ளலாம். இவ்வாறு பதிவு செய்தவர்கள் மட்டுமே செப். 19-ஆம் தேதி காலை 10 முதல் 21-ஆம் தேதி மாலை 4.30 மணி வரை ஏலத்தில் பங்கு பெறலாம்.
இந்த மின்னணு ஏல முறையில் பங்கு பெற விரும்பும் பொதுமக்கள் அதற்கான வழிமுறை கள், ஏல நிபந்தனைகளை https://transport.py.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், விண்ணப்பத் தொகை, இ.எம்.டி., ஏல நிபந்தனைகள் குறித்த விவரங்களை போக்குவரத்து துறை அலுவலகத்திலும் தெரிந்து கொள்ளலாம்.
ஏலம் தொடர்பான பண பரிவர்த்த இணையதளம் வாயிலாக மட்டும் பெறப்படும். நேரிலோ, காசோலையாகவோ ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






