புதுச்சேரி முத்தியால்பேட்டையில் 200 பயனாளிகளுக்கு பல்வேறு உதவித்தொகையை அமைச்சர் மு.கந்தசாமி செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், முதிர்கன்னிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு அரசு உதவித்தொகை வழங்க தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் தொடர் நடவடிக்கை மேற்கொண்டார்.
இதன் விளைவாக முத்தியால்பேட்டை தொகுதியில் 200 பேருக்கு உதவித்தொகை வழங்க அரசு ஒப்புதல் அளித்தது.
புதிய பயனாளிகளுக்கு முதல் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் வையாபுரிமணிகண்டன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். சமூகநலத் துறை அமைச்சர் கந்தசாமி பயனாளிகளுக்கு உதவித் தொகையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குநர் யஷ்வந்தையா, அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்! | Rajastan | Shorts

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


