அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

பால் வியாபாரியைத் தாக்கிய இளைஞர் கைது

புதுவை மாநிலம், பாகூரில் பால் வியாபாரியைத் தாக்கிய இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On :25 பிப்ரவரி 2019, 8:36 am IST

புதுவை மாநிலம், பாகூரில் பால் வியாபாரியைத் தாக்கிய இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
 பாகூர் குருவிநத்தம் மேற்கு வீதியைச் சேர்ந்தவர் மணி (30). பால் வியாபாரி. சனிக்கிழமை இரவு பால் வியாபாரத்தை முடித்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் குருவிநத்தம் தூக்குப்பாலம் வழியாக வீட்டுக்குச் சென்றார். 
அப்போது அந்த வழியாக வேகமாகச் சென்ற காரிலிருந்து இறங்கியவர்கள், மணியிடம் ஏன் வேகமாகச் செல்கிறாய் எனக் கேட்டு தகராறு செய்தனர்.
 தொடர்ந்து, காரில் வந்த குருவிநத்தம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த நடராஜ் (24), அவரது நண்பர் ரஞ்சித் (23) இருவரும் மணியை திட்டி கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அரிவாளால் அவரை வெட்ட முயன்றுள்ளனர்.  தாக்குதலில் காயமடைந்த மணி, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 இதுகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலீஸார் வழக்குப் பதிந்து நடராஜை கைது செய்தனர். ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.