தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!பேரவைத் தலைவரை கரம்பிடித்து அமரவைக்கும் சம்பிரதாயம்! முதல்வர் விஜய் கூறிய குட்டிக்கதைஎல்பிஜி சிலிண்டர் மானியம் நிறுத்தப்படும்! குறுந்தகவல் சொல்வது என்ன?50 கார்களில் அணிவகுத்த பாஜகவின் சௌபாக்ய சிங் தாகூர்! இதுதான் சிக்கனமா?நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கத் தடை! உச்ச நீதிமன்றத்தில் தவெக எம்எல்ஏ மேல்முறையீடு! தவெகவுக்கு ஆதரவு! எம்.எல்.ஏ. காமராஜ் அமமுகவிலிருந்து நீக்கம்!நீட் தேர்வில் ஸ்கேம் இல்லை; நீட்டே ஒரு ஸ்கேம்தான்! - ஸ்டாலின்நீட் மறுதேர்வுக்கு கட்டணம் இல்லை! செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்! மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து!
/

சொசைட்டிக் கல்லூரி ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

அரசு சொசைட்டிக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் போராட்டத்தை மாநில அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என இடதுசாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Updated On :23 ஜனவரி 2019, 8:54 am IST

அரசு சொசைட்டிக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் போராட்டத்தை மாநில அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என இடதுசாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
 இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலச் செயலாளர் அ.மு. சலீம் வெளியிட்ட அறிக்கை:
7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் அரசுக் கல்லூரிகளுக்கு மட்டும் நிறைவேற்றப்படும் என்றும், சொசைட்டி கல்லூரிகளுக்கு நிறைவேற்றப்படாது என்றும் அரசு முடிவெடுத்திருப்பது பாரபட்சமான செயலாகும். 
 பணியில் சேர்க்கும் போது மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு ஆகிய அமைப்புகளின் பரிந்துரைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு, பணியில் சேர்ந்த பிறகு ஊதிய உயர்வு இல்லை என்று அரசு கூறுவது நியாயமற்றது. இதனால், சொசைட்டிக் கல்லூரி ஆசிரியர்கள், பணியாளர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருப்பது மாணவ சமுதாயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். 
எனவே, புதுவை மாநில அரசு உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு போராட்டக் குழுவினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ஆர். ராஜாங்கம் வெளியிட்ட அறிக்கை: 
புதுவை அரசின் கீழ் செயல்பட்டு வரும் 18 அரசு சொசைட்டி கல்லூரி ஆரியர்கள், இதர ஊழியர்கள் 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த அரசிடம் பலமுறை வலியுறுத்தியும், அரசு தகுந்த நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததின் காரணமாக மேற்படி நிறுவனங்களில் உள்ள 4,000 அதிகமான ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் கடந்த 3 நாள்களாக பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதனால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
ஆசிரியர்கள், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஊதிய உயர்வு உள்ளிட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.