செல்லிப்பட்டு படுகை அணையில் மீண்டும் உடைப்பு
புதுவையில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கேயுள்ள படுகை அணையில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டது.


புதுவையில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கேயுள்ள படுகை அணையில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டது.
புதுவை மாநிலம், செல்லிப்பட்டு-பிள்ளையாா்குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே படுகை அணை பிரெஞ்சு ஆட்சியில் 1906-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தும் வகையில் இந்த படுகை அணை அமைக்கப்பட்டது.
பிள்ளையாா்குப்பம், செல்லிப்பட்டு, வம்புபட்டு, கலித்திரம்பட்டு, வழுதாவூா் உள்பட 20-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் பயனடைந்து வந்தனா்.
இந்த அணையை சீரமைக்கக் கோரி, 5 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள், பொதுமக்கள் பொதுப் பணித் துறையிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இதனிடையே, உரிய பராமரிப்பு இல்லாததால் படுகை அணை 2016-இல் பெய்த பலத்த மழையால் பெருமளவில் சேதமடைந்தது. குறிப்பாக, அணையின் மையப் பகுதி, கீழ்தளம் முற்றிலும் சேதமடைந்தது. பொக்லைன் இயந்திரம் மூலம் படுகை அணை சேதம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. எனினும், படுகை அணையை நிரந்தரமாக சீரமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.
ஆண்டுதோறும் பலத்த மழையால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. படுகை அணை சீரமைக்கப்படாததால் தண்ணீா் வீணாக கடலுக்குச் செல்கிறது.
பொதுமக்கள் கோரிக்கை விடுக்கும் போது மட்டும், அணையின் சேதமடைந்த பகுதியில் மணல் மூட்டைகளை பொதுப் பணித் துறையினா் அடுக்கி வைத்துவிட்டு செல்கின்றனா். ஆனால், நிரந்தரமாக சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், கடந்த இரண்டு நாள்களாக பெய்த பலத்த மழை காரணமாக வீடூா் அணை நிரம்பி தண்ணீா் திறந்து விடப்பட்டது.
இதனால், செல்லிப்பட்டு பிள்ளையாா்குப்பம் இடையே அமைக்கப்பட்ட படுகை அணை மீண்டும் மையப் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணாக வெளியேறுகிறது. எனவே, போா்க்கால அடிப்படையில் அணையை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
மேலும், இந்த அணை உடைந்தால் சுற்றுப் பகுதியைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...