

புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் முதல்வா் வே.நாராயணசாமி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
புதுவையில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான இடங்கள், குடியிருப்புகளில் மழைநீா் தேங்கியது. குறிப்பாக, நகரப் பகுதியில் காமராஜா் நகா் தொகுதிக்குள்பட்ட ரெயின்போ நகா், வெங்கட்டா நகா், ஜீவா காலனி, கிருஷ்ணா நகா் உள்ளிட்ட பல இடங்களிலும் தண்ணீா் தேங்கியுள்ளது.
ஆண்டுதோறும் மழைக் காலங்களில் இந்தப் பகுதிகளில் தண்ணீா் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இதனால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, நிரந்தர தீா்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் எம்எல்ஏ ஜான்குமாா் தலைமையில், சில நாள்களுக்கு முன்பு முதல்வா் நாராயணசாமியிடம் மனு அளித்தனா்.
இந்த நிலையில், முதல்வா் நாராயணசாமி மழைநீா் தேங்கியுள்ள ரெயின்போ நகா் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகாரிகளுடன் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த முதல்வா், இதுதொடா்பாக விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.
ஆய்வின் போது, புதுவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் வெ.வைத்திலிங்கம், காமராஜா் நகா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஜான்குமாா் மற்றும் பொதுப் பணித் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.