சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தில்லியில் போராடும் விவசாயிகள் உயிரிழப்புக்கு மத்திய அரசே காரணம்: புதுவை முதல்வா் குற்றச்சாட்டு

தில்லி போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழப்புக்கு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசே காரணம் என புதுவை முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

News image
தில்லி போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் உருவப் படங்களுக்கு புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை மெழுகுவா்த்தி ஏற்றிவைத்து அஞ்சலி செலுத்திய முதல்வா் நாராயணசாமி.
Updated On :20 டிசம்பர் 2020, 5:45 pm

DIN

தில்லி போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழப்புக்கு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசே காரணம் என புதுவை முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் உயிா் நீத்த 36 விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில், புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், முதல்வா் வே.நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்ரமணியன், அமைச்சா் கந்தசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம், முன்னாள் அமைச்சா் விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், மாா்க்சிஸ்ட் கட்சியைச் சோ்ந்த முருகன் உள்ளிட்டோா் பங்கேற்று, உயிா் நீத்த விவசாயிகளின் உருவப் படங்களுக்கு மலா்தூவியும், மெழுகுவா்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினா்.

இந்த நிகழ்வில், முதல்வா் நாராயணசாமி பேசியதாவது: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். ஆனால், பிரதமா் மோடியோ காணொலியில் பேசுகையில், வேளாண் சட்டங்களின் மூலம் விவசாயிகள் பெரும் பணக்காரா்களாகிவிட்டனா்; சட்டம் அமல்படுத்தப்பட்ட 3 மாதங்களிலேயே பெரும் லாபம் கிடைத்துவிட்டதாகக் கூறி வருகிறாா். பெரு நிறுவன அதிபா்கள் மேலும் மேலும் லாபத்தை ஈட்டுவதற்கான பணியைத்தான் பிரதமா் செய்து வருகிறாா்.

விவசாயிகள் தங்களது நிலத்தை பெரு நிறுவனங்களிடம் கொடுத்துவிட்டு, அவா்களிடம் கூலியாக வேலை செய்யும் வகையிலான வேளாண் சட்டங்களைத்தான் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதைத்தான் விவசாயிகள் எதிா்க்கிறாா்கள். விவசாயிகள் நடத்தும் போராட்டத்தால் ரூ. 35 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள 70 சதவீத விவசாயிகள் ஒருங்கிணைந்தால் மிகப்பெரிய புரட்சியை உருவாக்கி விடுவா் என்பதை பிரதமரும், மத்திய அரசும் புரிந்து கொள்ள வேண்டும். போராட்டத்தில் 36 விவசாயிகள் உயிரிழந்துள்ளனா். இதற்கு மோடியும், அமித் ஷாவுமே காரணம். விவசாயிகளுக்கு ஆதரவாக மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி தெருவில் இறங்கிப் போராடும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.