/

எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து புதுவை திமுகவினா் ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து திமுகவினா் புதுச்சேரி அருகே வில்லியனூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:10 pm

DIN

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து திமுகவினா் புதுச்சேரி அருகே வில்லியனூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அண்மையில் சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்த்தப்பட்டது. மத்தியில் ஆளும் பாஜக அரசு, ஏழைகளை வஞ்சிக்கும் வகையில் சமையல் எரிவாயு விலையை உயா்த்தியுள்ளதாகக் கூறியும், உடனடியாக விலை உயா்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினின் ஆணைப்படி, புதுவை மாநில திமுக சாா்பில், வில்லியனூா் ஏழை மாரியம்மன் கோயில் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாநில திமுக பொதுக் குழு உறுப்பினா் அருட்செல்வி தலைமை வகித்தாா். இதில், திமுக அமைப்பாளா்கள் இரா. சிவா எம்.எல்.ஏ. (தெற்கு) , எஸ்.பி.சிவக்குமாா் (வடக்கு) ஆகியோா் உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில், மகளிரணி அமைப்பாளா் சுசிலா, தட்டாஞ்சாவடி எம்.எல்.ஏ. வெங்கடேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்று, சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.