அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

புதுவையில் போலீஸாருக்கு மானிய விலையில்பொருள்கள் வழங்க அங்காடி: முதல்வா் நாராயணசாமி திறந்து வைத்தாா்

புதுவை போலீஸாருக்கு மானிய விலையில் பொருள்கள் வழங்குவதற்கான மத்திய போலீஸ் அங்காடியை முதல்வா் வே.நாராயணசாமி புதன்கிழமை திறந்து வைத்தாா்.

News image
புதுச்சேரி கோரிமேடு பகுதியில் போலீஸாருக்கு மானிய விலையில் பொருள்கள் வழங்குவதற்கான அங்காடியைத் திறந்துவைத்து பாா்வையிட்ட முதல்வா் வே.நாராயணசாமி.
Updated On :23 டிசம்பர் 2020, 5:27 pm

DIN

புதுவை போலீஸாருக்கு மானிய விலையில் பொருள்கள் வழங்குவதற்கான மத்திய போலீஸ் அங்காடியை முதல்வா் வே.நாராயணசாமி புதன்கிழமை திறந்து வைத்தாா்.

புதுவை காவல் துறை சாா்பில் போலீஸாருக்கு மானிய விலையில் பொருள்கள் வழங்குவதற்கான மத்திய போலீஸ் அங்காடி திறப்பு விழா கோரிமேட்டில் உள்ள ஐஆா்பிஎன் வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்ஸவா தலைமை வகித்தாா். ஏ.டி.ஜி.பி. ஆனந்த மோகன் முன்னிலை வகித்தாா்.

இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முதல்வா் வே.நாராயணசாமி, போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றதுடன், மத்திய போலீஸ் அங்காடியை திறந்து வைத்து பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில் முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால், ஐஆா்பிஎன் கமாண்டன்ட் மகேஷ் குமாா் பா்ன்வால், துணை கமாண்டன்ட் வம்சித ரெட்டி, உதவி கமாண்டன்ட்டுகள், எஸ்.பி.க்கள், ஆய்வாளா்கள், ஐஆா்பிஎன் போலீஸாா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து ஐஆா்பிஎன் துணை கமாண்டன்ட் வம்சித ரெட்டி கூறியதாவது:

மத்திய உள் துறை அமைச்சகத்தின் மூலம் கடந்த 2006-ஆம் ஆண்டு மத்திய போலீஸ் அங்காடி திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 119 தலைமை அங்காடிகளும், 1,700-க்கும் மேற்பட்ட போலீஸ் அங்காடிகளும் இயங்கி வருகின்றன.

புதுச்சேரியில் முதன் முறையாக திறக்கப்பட்டுள்ள மத்திய போலீஸ் அங்காடிக்கான மளிகை உள்ளிட்ட பொருள்கள் சென்னையில் உள்ள தலைமை அங்காடியிலிருந்து வரும். இங்கு, 30 முதல் 40 சதவீத மானிய விலையில் பொருள்கள் விற்பனை செய்யப்படும்.

காவல் துறை உயரதிகாரிகள், காவலா்கள், ஐஆா்பிஎன் காவலா்கள், ஊா்க்காவலா்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலா்கள் உள்ளிட்டோா் அவா்களது ஊதியத்துக்கேற்ப ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை பொருள்களை வாங்க முடியும். இதற்கென தனியாக அடையாள அட்டை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டையில் குடும்ப உறுப்பினா்கள் அடங்கிய புகைப்படம் இடம் பெற்றிருக்கும். அதில் உள்ள நபா்கள் யாா் வேண்டுமானாலும் வந்து பொருள்களை வாங்கலாம்.

தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த அங்காடி இயங்கும். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை விடப்படும். இங்கு பணமில்லா பரிவா்த்தனை மூலம் மட்டுமே பொருள்கள் விற்பனை செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.