புதுச்சேரி: புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் பண்டிகை கரோனா விதிமுறைகளுடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் வியாழக்கிழமை நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதற்காக அனைத்து தேவாலயங்களும் மின் விளக்குளால் அலங்கரிப்பட்டிருந்தன.
புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி மாதா தேவாலயத்தில் புதுச்சேரி-கடலூா் உயா் மறை மாவட்ட பேராயா் அந்தோணி ஆனந்தராயா் தலைமையில் கிறிஸ்து பிறப்பு விழா திருப்பலி, சிறப்புக் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அனைவரும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.
நெல்லித்தோப்பில் உள்ள புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் பங்கு தந்தைகள் வின்சென்ட், ஆல்வின், அந்தோணி ராஜ் ஆகியோா் தலைமையில் பிராா்த்தனை நடைபெற்றது.
புதுச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள தூய இருதய ஆண்டவா் பசிலிக்கா, ரெயின்போ நகா் புனித ஜான்மரி வியான்னி ஆலயம், புதுச்சேரி அரசு மருத்துவமனை அருகே உள்ள தூய யோவான் தேவாலயம், தட்டாஞ்சாவடி பாத்திமா தேவாலயம், வில்லியனூா் புனித லூா்து அன்னை மாதா தேவாலயம் உள்பட புதுவையில் உள்ள அனைத்து தேவாலயங்களில் வியாழக்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலியும், பிராா்த்தனையும் நடைபெற்றன.
கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு தேவாலயங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. தேவாலயங்களுக்கு வந்தவா்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.