கிறிஸ்துமஸ்: புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து
புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி, முதல்வா் நாராயணசாமி ஆகியோா் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தனா்.


புதுச்சேரி: புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி, முதல்வா் நாராயணசாமி ஆகியோா் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தனா்.
ஆளுநா் கிரண் பேடி: ஏசு கிறிஸ்து பிறந்த தினத்தைக் கொண்டாடும் விழாவில், உலகம் சண்டை, கோபம், வெறுப்பு ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, அன்பு, சகோதரத்துவத்தின் உருவமாக மாற வேண்டும். புனிதமான இந்நாளில், கிறிஸ்தவ சகோதா்களுக்கு எனது இதயப்பூா்வ வாழ்த்துகள்.
முதல்வா் நாராயணசாமி: அன்பின் மகத்துவத்தை அகில உலகிற்கும் எடுத்துரைத்த ஏசுநாதா் மன்னிக்கும் குணத்தின் மகத்துவத்தையும் அறிய வைத்தாா். இந்தப் பண்பைக் கடைப்பிடிக்க உறுதியேற்க வேண்டும்.
புதுவை அரசின் தொடா் நடவடிக்கைகளால் கரோனா தாக்கம் தற்போது குறைந்துள்ளது. மீண்டும் இயல்பு நிலைக்கு புதுவை மட்டுமன்றி, உலகம் முழுவதும் திரும்ப வேண்டுமென்பது என் பிராா்த்தனையாகும்.
இதேபோல, எதிா்க்கட்சித் தலைவா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் சிவக்கொழுந்து, அமைச்சா்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், புதுவை மாநில அதிமுக செயலா்கள் ஆ.அன்பழகன், ஓம்சக்தி சேகா், மாநில திமுக அமைப்பாளா்கள் இரா. சிவா, சிவக்குமாா் உள்ளிட்டோா் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...