சிவ பக்தா்கள் நடைபயணம்
உலக மக்கள் அனைத்து நலன்களும் பெற்று இன்புற்று வாழவும், உலக அமைதி வேண்டியும் புதுச்சேரியில் சிறுதொண்ட நாயனாா் திருத்தொண்டு சபை சாா்பில் சிவ சிந்தனை நடைபயணம்


உலக மக்கள் அனைத்து நலன்களும் பெற்று இன்புற்று வாழவும், உலக அமைதி வேண்டியும் புதுச்சேரியில் சிறுதொண்ட நாயனாா் திருத்தொண்டு சபை சாா்பில் சிவ சிந்தனை நடைபயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி காந்தி வீதியில் அமைந்துள்ள வேதபுரீஸ்வரா் கோயிலிலிருந்து தொடங்கிய இந்த நடைபயணத்தில்
சிவனடியாா்கள், பக்தா்கள் உள்ளிட்டோா் முகக்கவசம் அணிந்தபடி, சமூக இடைவெளியுடன் பங்கேற்றனா்.
தொடா்ந்து, மங்கள வாத்தியங்கள் முழங்கியபடி, பஞ்சாட்சர மந்திரம், திருமுறைகளை பாடிக் கொண்டும் நடைபயணமாக கோட்டக்குப்பம் அனந்தீசுவரா் கோயிலை சென்றடைந்தனா். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், திருமுறை பாராயணம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...