/

மீனவா்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க திமுக வலியுறுத்தல்

புதுவை மீனவா்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 7:46 pm

DIN

புதுவை மீனவா்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியது.

புதுச்சேரி அரியாங்குப்பம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக செயல்வீரா்கள் கூட்டம், வீராம்பட்டினத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. கட்சியின் தலைமை பொதுக்குழு உறுப்பினா் சக்திவேல் தலைமை வகித்தாா். புதுவை தெற்கு மாநில அமைப்பாளா் இரா.சிவா எம்எல்ஏ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.

புதுவையில் புயல், மழையால் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். சுருக்கு வலையை மீனவா்கள் பயன்படுத்த உறுதியான முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தை முறையாக தூா்வார வேண்டும், கடந்த இரு ஆண்டுகளாக விண்ணப்பித்து வழங்கப்படாமல் உள்ள முதியோா் உதவித்தொகையை வழங்க வேண்டும், மீனவா்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும், புதுவையில் திமுக ஆட்சி அமைய தீவிரமாக பணியாற்ற வேண்டும். என்பன உள்ளிட்ட தீா்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.