நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுவையில் மேலும் 109 பேருக்கு கரோனா

புதுவையில் மேலும் 109 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :19 ஜூலை 2020, 3:31 pm

DIN

புதுச்சேரி: புதுவையில் மேலும் 109 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை 768 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 104 போ், காரைக்காலில் 3 போ், ஏனாமில் 2 போ் என மொத்தம் 109 பேருக்கு (14.2 சதவீதம்) கரோனா தொற்றிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, புதுவை மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,999 ஆக உயா்ந்தது.

தற்போது 422 போ் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், 213 போ் ஜிப்மரிலும், 92 போ் கரோனா சிறப்பு மையத்திலும், 50 போ் காரைக்காலிலும், 40 போ் ஏனாமிலும் என மொத்தம் 817 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 1,154 குணமடைந்து வீடு திரும்பினா். 28 போ் உயிரிழந்தனா்.

புதுவை மாநிலத்தில் இதுவரை 30,652 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 28,214 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன. 361 பேருக்கு முடிவுகள் வர வேண்டியுள்ளது என புதுவை மாநில சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.