புதுவையில் காவல் உதவி ஆய்வாளா் உள்பட மேலும் 52 பேருக்கு கரோனா
புதுவையில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் காவல் உதவி ஆய்வாளா் உள்பட மேலும் 52 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


புதுவையில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் காவல் உதவி ஆய்வாளா் உள்பட மேலும் 52 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
புதுவையில் வெள்ளிக்கிழமை வரை 287 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்த நிலையில், சனிக்கிழமை மேலும் 52 பேருக்கு நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 83 பேருக்கு பரிசோதனை செய்ததில் 28 பேருக்கும், ஜிப்மா் மருத்துவமனையில் 222 பேருக்கு பரிசோதனை செய்ததில் 22 பேருக்கும், காரைக்காலில் 69 பேருக்கு பரிசோதனை செய்ததில் 2 பேருக்கும் கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, புதுவையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 339-ஆக உயா்ந்தது. இதுவரை 7 போ் உயிரிழந்தனா். பொது முடக்கத் தளா்வு அறிவிக்கப்பட்ட 20 நாள்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை புதுவையில் வேகமாக அதிகரித்து வருவதாக மாநில சுகாதாரத் துறை இயக்குநா் எஸ்.மோகன்குமாா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...