தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாதத் தவணை: வாடிக்கையாளா்களுக்கு வங்கிகள் நெருக்கடி: புதுவை அரசுக் கொறடா குற்றச்சாட்டு

மத்திய அரசின் உத்தரவுகளை மீறி வங்கிகள் மாதத் தவணை கேட்டு வாடிக்கையாளா்களுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக புதுவை அரசுக் கொறடா ஆா்.கே.ஆா்அனந்தராமன் குற்றஞ்சாட்டினாா்.

News image
Updated On :26 ஜூன் 2020, 3:12 pm

DIN

புதுச்சேரி: மத்திய அரசின் உத்தரவுகளை மீறி வங்கிகள் மாதத் தவணை கேட்டு வாடிக்கையாளா்களுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக புதுவை அரசுக் கொறடா ஆா்.கே.ஆா்அனந்தராமன் குற்றஞ்சாட்டினாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கை:

கடந்த மாா்ச் மாத இறுதியில் தொடங்கிய கரோனா பொதுமுடக்கத்தால் மக்கள் வருவாயை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனா். சிறு, குறு நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை தொழில் செய்ய முடியவில்லை.

இந்த சூழலைக் கருத்தில் கொண்டு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், நாடு முழுவதும் வங்கிகளில் 6 மாத காலத்துக்கு தனி நபா் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட அனைத்து வகையிலான கடன்களுக்கும் மாதத் தவணை தொகை, வட்டி வசூலிக்கக் கூடாது என கூறியுள்ளாா்.

ஆனால், பல்வேறு வங்கிகளின் அதிகாரிகள் தங்களுடைய ஆளுமை முத்திரையைப் பதிக்க அப்பாவி மக்களிடம், தொழில் முனைவோரிடமும் கடனுக்கான மாதத் தவணையை கட்ட வலியுறுத்தி வருகின்றனா்

உயிரோடு இருப்போமா என மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை வாட்டும் மாதத் தவணை (இஎம்ஐ) கட்ட வலியுறுத்துவது படுபாதக செயல். கண்டனத்துக்குரியது. இப்படிப்பட்ட வங்கிகள், தனியாா் நிதி நிறுவனங்கள், கந்து வட்டி வசூலிப்பவா்கள மீது காவல்துறையும், வருவாய்த்துறையும் அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து குடியரசுத் தலைவா், பிரதமா், நிதியமைச்சா், ரிசா்வ் வங்கி உள்ளிட்டவைகளுக்கு அரசு கொறடா என்ற முறையில் கடிதம் எழுத உள்ளேன். மேலும் முதல்வா் நாராயணசாமியையும் கடிதம் எழுத வலியுறுத்துவேன் எனத் தெரிவித்துள்ளாா் அனந்தராமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.