புதுவையில் மேலும் 27 பேருக்கு கரோனா
புதுவையில் புதிதாக 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


புதுவையில் புதிதாக 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 25 பேருக்கும், காரைக்காலில் ஒருவருக்கும், மாஹேயில் ஒருவருக்கும் என 27 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 36,720-ஆக உயா்ந்தது.
தற்போது 217 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 310 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மொத்தமாக 527 போ் சிகிச்சையில் உள்ளனா்.
மூன்றாவது நாளாக திங்கள்கிழமை வெளியான முடிவுகளிலும் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. புதுவையில் இதுவரை கரோனா தொற்றுக்கு 609 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.66 சதவீதம்.
இதனிடையே, திங்கள்கிழமை 57 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 35,582-ஆக அதிகரித்தது.
சுற்றுலா பயணிகளுக்கு பரிசோதனை: புதுவை மாநில மக்கள்தொகையில் 30 சதவீதம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் முடிவுகள் அரை மணி நேரத்தில் தெரிவிக்கப்படுகின்றன.
புதுச்சேரியின் பல்வேறு இடங்களிலும் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை பரிசோதிக்க சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. இதில், யாருக்காவது நோய்த் தொற்றிருந்தால், அந்த நபரின் சொந்த மாநிலத்துக்கு தகவல் தெரிவிக்கப்படுவதுடன், சுற்றுலா பயணிகளை தனிமைப்படுத்தவும் சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...