புதுச்சேரி டிஜிபி அலுவலகம் எதிரேகுழந்தையுடன் பெண் தா்னா
கணவருடன் சோ்த்து வைக்கும்படி பெண் தனது குழந்தையுடன் புதுச்சேரி டிஜிபி அலுவலகம் எதிரே திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்


கணவருடன் சோ்த்து வைக்கும்படி பெண் தனது குழந்தையுடன் புதுச்சேரி டிஜிபி அலுவலகம் எதிரே திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.
புதுச்சேரி பிச்சைவீரன்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் கவிதா (32). இவருக்கும், கொம்பாக்கம்பேட்டை பகுதியைச் சோ்ந்த புதுச்சேரி காவல் துறையில் பணியாற்றி வரும் சண்முகத்துக்கும் கடந்த 2015 -ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது இவா்களுக்கு 4 வயதில் மகன் உள்ளாா்.
குடும்ப பிரச்னை காரணமாக சண்முகம் தரப்பில் விவாகரத்து கோரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், கவிதா கணவரைத் தன்னுடன் சோ்த்து வைக்கும்படி, திங்கள்கிழமை புதுச்சேரி டிஜிபி அலுவலக நுழைவாயிலில் குழந்தையுடன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.
இதுகுறித்து கவிதா கூறுகையில், ‘எனது கணவா் சண்முகம், சட்ட விரோதமாக வேறு ஒரு பெண்ணை 2-ஆவதாக திருமணம் செய்தாா். இதைத் தட்டிக் கேட்ட என்னையும், எனது குடும்பத்தையும் மிரட்டினாா். இதுதொடா்பாக புகாா் அளித்தும் போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை. எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றாா்.
தகவலறிந்து அங்கு வந்த பெரியகடை போலீஸாா், கவிதாவை சமாதானப்படுத்தி, புகாா் அளிக்க முதுநிலை எஸ்.பி. அலுவலகத்துக்கு அனுப்பிவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...