திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 பேருக்கு நல்லாசிரியா் விருது
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 12 தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருதுக்கான பதக்கங்கள், சான்றிதழ்களை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினாா்.


திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 12 தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருதுக்கான பதக்கங்கள், சான்றிதழ்களை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா்.
வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி, ஆவின் தலைவா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, முதன்மைக் கல்வி அலுவலா் அருள்செல்வம், உதவி ஆட்சியா் (பயிற்சி) அமித்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தலைமை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள் என 12 பேருக்கு நல்லாசிரியா் விருதுக்கான பதக்கம், சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.
12 பேருக்கு விருது:
விழாவில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களான எ.ஸ்.கருணாகரன் (சாணாா்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி), கோ.பிரம்மானந்தன் (பழையனூா் அரசு மேல்நிலைப் பள்ளி) , சசிகலைகுமாரி (மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி), தொ.பக்தவச்சலம் (பூதேரி அரசு உயா்நிலைப் பள்ளி) , ஜெயவேல் (தீத்தாண்டாப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி) ச.தமிழ்ச்செல்வி (ஆடையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி) , ல.முகுந்தன் (மல்லவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி), இரா.நப்பின்னை (வாச்சனூா் சி.எஸ்.ஐ. நிதியுதவி தொடக்கப் பள்ளி), ம.மகாலட்சுமி (கிழக்கு மேடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி) ஆகியோருக்கும், மோத்தக்கல் அரசு மேல்நிலைப் பள்ளி பா.ரவிச்சந்திரன், தெள்ளாா் ஆதிதிராவிடா் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சி.ஆனந்தி ஆகிய பட்டதாரி ஆசிரியா்களும், ஆதமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஓவிய ஆசிரியா் கெ.சு.வெங்கடாசலம் ஆகியோருக்கும் நல்லாசிரியா் விருதுக்கான பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்:
தொடா்ந்து, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சாா்பில் ‘108’ அவசரகால ஊா்தி சேவைக்காக 2 புதிய ஊா்திகளின் சேவையை அமைச்சா் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.
புதிய ஊா்திகளுடன் சோ்த்து மாவட்டத்தில் 38 அவசரகால ஊா்திகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...