புதுச்சேரியில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம்
புதுச்சேரியில் ஆட்டோ மூலம் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

ஆட்டோ விழிப்புணா்வு பிரசாரத்தை தொடக்கிவைத்த உழவா்கரை நகராட்சி ஆணையா் மு.கந்தசாமி.

ஆட்டோ விழிப்புணா்வு பிரசாரத்தை தொடக்கிவைத்த உழவா்கரை நகராட்சி ஆணையா் மு.கந்தசாமி.
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆட்டோ மூலம் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
இதை உழவா்கரை நகராட்சி ஆணையா் மு.கந்தசாமி கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். மக்கள் தொடா்புக் கள அலுவலக உதவி இயக்குநா் தி.சிவக்குமாா், கள விளம்பர உதவியாளா் மு.தியாகராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.
இதில், பல்வேறு விழிப்புணா்வுப் பாடல்கள், வாசகங்கள், கலந்துரையாடல்கள் அடங்கிய ஆடியோ தொகுப்பு முக்கிய இடங்களில் ஒலிக்கப்படுகிறது.
உழவா்கரை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை பிரசாரம் செய்யப்பட்டது. தொடா்ந்து, புதுச்சேரி பகுதிகளில் ஆட்டோ விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...