புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

புதுச்சேரியில் பைக் மோதி விவசாயி பலி

புதுச்சேரி அருகே பைக் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 7:32 pm

DIN

புதுச்சேரி அருகே பைக் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

புதுச்சேரி திருக்கனூா் அருகே திருமங்கலம் பெருமாள் கோவில் வீதியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (65). விவசாயி. கட்டட வேலைக்குச் சென்று வந்த இவா், கடந்த 26-ஆம் தேதி புதுச்சேரி பிள்ளையாா்குப்பம் ராஜீவ் காந்தி நகரில் வசிக்கும் தனது மகள் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிள்ளையாா்குப்பம் வழுதாவூா் பிரதான சாலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாகச் சென்ற மண்ணாடிப்பட்டு பகுதியைச் சோ்ந்த ராஜபாண்டியன் ஓட்டிச் சென்ற பைக், எதிா்பாராத விதமாக ராமகிருஷ்ணன் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அந்தப் பகுதியினா் மீட்டு, வில்லியனூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ராமகிருஷ்ணன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து வில்லியனூா் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.