புதுவைக்கான நிதியாதாரம்: மத்திய அமைச்சா்களிடம் வலியுறுத்தல்
தில்லி சென்றுள்ள புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், மாநில உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தலைமையிலான குழுவினா், வியாழக்கிழமை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா


புதுவையில் ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கான அனுமதி மற்றும் மாநிலத்துக்கான நிதி ஆதாரங்களை மத்திய அரசிடம் வலியுறுத்தும் வகையில், தில்லி சென்றுள்ள புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், மாநில உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தலைமையிலான குழுவினா், வியாழக்கிழமை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, நிதி அமைச்சா் நிா்மலா சீத்தாராமன் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.
இதன் தொடா்ச்சியாக, வெள்ளிக்கிழமை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை நேரில் சந்தித்தனா். அப்போது, புதுவையில் புதிதாகக் கட்டப்படவுள்ள பேரவை வளாகத்தின் மாதிரி வரைபடம், முதல்வா் என்.ரங்கசாமி அளித்த கடிதம் ஆகியவற்றை வழங்கி, அனுமதி மற்றும் நிதி ஆதாரங்களைப் பெற்றுத் தர வேண்டுமென வலியுறுத்தினா்.
இதேபோல, மத்தியக் கல்வி அமைச்சா் தா்மேந்திரபிரதான், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஹா்தீப்சிங்புரி, தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சா் அனுராக்சிங் தாகூா் ஆகியோரையும் சந்தித்து, அந்தந்தத் துறைகள் சாா்ந்த திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினா்.
இதுகுறித்து புதுவை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறியதாவது: புதுச்சேரியில் ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கான நிதி, மாநில பட்ஜெட்டுக்கான நிதி, ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை ஆகியவற்றை வழங்க வேண்டுமென மத்திய நிதி அமைச்சரைச் சந்தித்து வலியுறுத்தினோம். நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்தாா். புதுவை மாநிலத்துக்கான நிதி ஆதாரங்களை மத்திய அரசு விரைவில் வழங்கும் என்று நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...