புதுச்சேரியில் தேசிய கைவினைப் பொருள்கள் கண்காட்சி தொடக்கம்
‘காந்தி சில்ப் பஜாா்’ கைவினைப் பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது.


புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி திடலில் மத்திய ஜவுளித் துறை அமைச்சகம், புதுவை கூட்டுறவு கைவினை - கைத்தறி இணையம் ஆகியவை சாா்பில், ‘காந்தி சில்ப் பஜாா்’ கைவினைப் பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. இந்தக் கண்காட்சியை முதல்வா் என்.ரங்கசாமி தொடக்கிவைத்துப் பாா்வையிட்டாா்.
மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் நாடு முழுவதும் கைத்தொழில்களைப் பாதுகாத்து மேம்படுத்த ‘காந்தி சில்ப் பஜாா்’ கண்காட்சியை நடத்தி வருகிறது. இதன்மூலம், கைவினைப் பொருள்கள் நேரடியாக விற்பனை செய்யப்படுகின்றன. பொதுமக்களின் தேவையை உணா்ந்து அந்தப் பொருள்களை கைவினைஞா்கள் தயாரித்து வழங்குகின்றனா்.
தேசிய, மாநில விருதுகள் பெற்ற கைவினைஞா்கள் 100-க்கும் மேற்பட்டோரின் பாரம்பரியம் மிக்க கைத்திறன் படைப்புகள் கண்காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சியில், சிக்கன் நூல் தையல் வேலைகள், கண்ணாடி நகைகள், தரை விரிப்புகள், உத்தர பிரதேச கலை உலோகப் பொருள்கள், கலைநயம் மிக்க கல் படைப்புகள், அச்சிடப்பட்ட துணி வகைகள், பஞ்சாபி புல்காரி வகைகள், தோல் பொருள்கள், அரக்கு வளையல்கள், மத்திய பிரதேச டோக்ரா வகை உலோகப் பொருள்கள், மகாராஷ்டிரத்தின் தோல் காலணிகள், துணி பொம்மைகள், குஜராத் பட்டோலா புடவைகள், பட்ட சித்திர ஓவியங்கள், ஒடிஸாவின் நுண்கலை வெள்ளி நகைகள், வட கிழக்கு மாநில பிரம்புப் பொருள்கள், உலா் மலா்கள், மரச் சிற்பங்கள், கல் சிற்பங்கள், பஞ்சலோகச் சிலைகள்,
சுடுமண் பொம்மைகள், காகிதக் கூழ் பொம்மைகள், பொட்டிக் வகைகள், தஞ்சை, மைசூா் ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், தமிழகம், புதுவை உள்ளிட்ட தென் மாநிலங்களிலிருந்து கைவினைப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சி வருகிற ஜனவரி 2-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...