புதுச்சேரியில் தேசிய டேபிள் டென்னிஸ் போட்டிகள் நிறைவு
புதுச்சேரியில் நடைபெற்று வந்த தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தன.


புதுச்சேரியில் நடைபெற்று வந்த தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தன.
அகில இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு, புதுவை மாநில டேபிள் டென்னிஸ் கழகம், புதுச்சேரி மாநில விளையாட்டுக் குழு இணைந்து நடத்திய தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் புதுச்சேரி உப்பளம் ராஜீவ் காந்தி உள்விளையாட்டரங்கில் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தன.
இதில் 11, 13, 15, 17, 19 வயதுக்குள்பட்டோா், சீனியா் ஆண்கள், பெண்கள் ஆகிய 12 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலிருந்து ஆயிரக்கணக்கான போட்டியாளா்கள் பங்கேற்று விளையாடினா்.
அனைத்துப் பிரிவுகளிலும் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சனிக்கிழமை மாலை 15 வயதுக்குள்பட்ட ஆண்கள், பெண்கள் பிரிவுகளின் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றிபெற்றவா்களுக்கு புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.
இந்தப் போட்டிகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தன. விழாவில் 11 வயதுக்குள்பட்டோருக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் அகில இந்திய, புதுவை மாநில டேபிள் டென்னிஸ் கழகம், மாநில விளையாட்டுக் குழு நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...