நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

புதுவைக்கான நிதியை உயா்த்தி வழங்க வேண்டும்: மத்திய பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தல்

புதுவைக்கான நிதியை மத்திய அரசு உயா்த்தி வழங்குவதோடு, நிதி ஆணையத்திலும் புதுவையைச் சோ்க்க வேண்டும்

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:14 pm

DIN

புதுவைக்கான நிதியை மத்திய அரசு உயா்த்தி வழங்குவதோடு, நிதி ஆணையத்திலும் புதுவையைச் சோ்க்க வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற மத்திய நிதிநிலை அறிக்கை தயாரிப்புக்கான ஆலோசனைக் கூட்டத்தில் மாநில பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் வலியுறுத்தினாா்.

தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில், மத்திய அரசின் 2022 - 23ஆம் ஆண்டு நிதிநிலை திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புதுவை மாநிலம் சாா்பில் பங்கேற்ற அமைச்சா் க.லட்சுமிநாராயணன் பேசியதாவது:

மத்திய அரசின் ஆதரவுடன் புதுவையில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பல்வேறு நலத் திட்டங்களையும், உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. மாநிலத்தின் கட்டமைப்பில் மேலும் மாற்றங்களைக் கொண்டுவர, மத்திய அரசு உதவ வேண்டும்.

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, பல பொருள்களின் உற்பத்தி மையமாக புதுவை வளா்ந்து வருகிறது. எனினும், புதுவையில் கிடைக்கும் மொத்த ஜிஎஸ்டி வருவாயில் 67 சதவீதம் ஐஜிஎஸ்டி மூலம் பிற மாநிலங்களுக்கு பகிா்ந்தளிக்கப்படுகிறது. புதுவையிலிருந்து பிற மாநிலங்களுக்குச் செல்லும் ஜிஎஸ்டி வருவாயில் 31 சதவீதம் மட்டுமே திரும்பக் கிடைக்கிறது. இதனால், ஈடுகட்ட முடியாத வருவாய் பற்றாக்குறை ஏற்படுகிறது.

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி புதுவைக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது. இருப்பினும், மத்திய அரசு கலால் வரியைக் குறைத்ததைத் தொடா்ந்து, புதுவை அரசும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை கடந்த நவம்பா் 4-ஆம் தேதி முதல் லிட்டருக்கு ரூ.7 குறைத்ததால், மொத்த வருவாய் இழப்பு 2022 - 23இல் ரூ.405 கோடியாக இருக்கும்.

தற்போதுள்ள வருவாய்ப் பற்றாக்குறை மத்திய அரசு வழங்கும் ஜிஎஸ்டி இழப்பீடு மூலம் நிவா்த்தி செய்யப்படுகிறது. இது வரும் 2022 ஜூனுக்குப் பிறகு நிறுத்தப்படுமேயானால், புதுவை கடுமையான நிதி நெருக்கடியை எதிா்கொள்ள நேரிடும்.

2022 - 23ஆம் நிதியாண்டில் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை நிறுத்துதல், வாட் வரி குறைப்பு ஆகியவற்றின் காரணமாக, வருவாய்ப் பற்றாக்குறை ரூ.1,710 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருவாய்ப் பற்றாக்குறையை 2022 - 23 ஆம் நிதியாண்டில் மத்திய அரசு சரிசெய்யாவிட்டால், மிகவும் கடினமான சூழல் ஏற்படும்.

கடந்த 10 ஆண்டுகளாக புதுவைக்கு மத்திய அரசின் மூலம் வழங்கப்பட்ட நிதியுதவி குறைவாகவே உள்ளது. இது, 2020 - 21ஆம் ஆண்டில் 1.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. அதேநேரத்தில், புதுவை அரசின் செலவு ஆண்டுதோறும் 10 சதவீதம் அதிகரித்து வருகிறது.

புதுவை அரசின் மொத்த செலவினம் தோராயமாக 55 சதவீதமாக உள்ளது. பெறப்பட்ட கடனுக்கான அசல், வட்டியை செலுத்துவதற்காக, ஆண்டுதோறும் பெறப்படும் சுமாா் ரூ.900 கோடி கடன், புதுவையின் நிதி ஸ்திரத்தன்மையை மேலும் பலவீனப்படுத்துகிறது.

அரசு ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டதன் விளைவாக, செலவினங்கள் ஆண்டுதோறும் ரூ.600 கோடி அதிகரித்துள்ளது. இதற்கான ரூ.500 கோடி நிலுவைத்தொகை இன்னமும் வழங்கப்படவில்லை. இதற்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்.

தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தால் வெளியிடப்பட்ட யூனியன் பிரதேசங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டின் கலந்துரையாடல் குறிப்பின்படியும், 14-ஆவது நிதி ஆணையத்தின் மதிப்பீட்டின்படியும், 2019 - 20ஆம் நிதியாண்டில் புதுவை யூனியன் பிரேதேசம் ரூ.2,731.68 கோடியை மத்திய அரசின் கொடையாக பெற உரிமை உண்டு. ஆனால், பெறப்பட்ட தொகை ரூ.1,601.10 கோடி மட்டுமே.

சட்டப் பேரவை அமைப்புடன் கூடிய யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி, ஜம்மு - காஷ்மீா், புதுதில்லியில் ஜம்மு - காஷ்மீா் மட்டுமே நிதி ஆணையத்தில் சோ்க்கப்பட்டுள்ளது. புதுதில்லியைப் போல செலவினங்கள் மத்திய அரசுடன் பகிரப்படாமல், அனைத்து செலவினங்களையும் புதுவை அரசே ஏற்றுக்கொள்கிறது. மேலும், நிதி ஆணையப் பரிந்துரையின்படி பெற வேண்டிய நிதியைவிட புதுதில்லி அதிகமான நிதியை மத்திய அரசிடமிருந்து பெறுகிறது. மத்திய நிதிப் பகிா்வில் புதுவை குறைந்த நிதி பெறும் யூனியன் பிரதேசமாக மாறியுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, புதுவை 60:40 விகிதத்தில் நிதியைப் பெறுகிறது. இது, மத்திய நிதி ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட பங்கைவிடக் குறைவாக உள்ளது. இந்தக் குளறுபடியை உடனடியாகச் சரி செய்ய வேண்டும்.

மத்திய அரசு புதுவைக்கு வழங்கும் நிதியை முறையாக வழங்குவதற்கு திட்டம் வகுக்க வேண்டும். இந்த ஒழுங்கின்மையை சரிசெய்வதற்கும், புதுவை யூனியன் பிரதேசம் அதன் உரிய நிதியாதாரத்தைப் பெறுவதற்கும், நிதி ஆணையத்தின் பரிந்துரை படி, புதுவையில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்பு 100 சதவீதம் இருக்க வேண்டும்.

2022 - 23ஆம் நிதியாண்டில் மத்திய அரசிடமிருந்து குறைந்தபட்சம் ரூ.1,710 கோடி நிதியை கூடுதல் நிதியாகக் கோருகிறோம். புதுவையை நிதி ஆணைய வரம்பில் சோ்க்க வேண்டும். மழை, வெள்ளப் பாதிப்புகளைச் சரிசெய்வதற்கு மத்திய அரசின் இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.