நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

புதுச்சேரியில் போக்குவரத்தில் மாற்றம்

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, புதுச்சேரி நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:11 pm

DIN

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, புதுச்சேரி நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, மக்கள் அதிகமாக வரக்கூடும் என்பதால், பொதுமக்களின் வசதிக்காக வெள்ளிக்கிழமை (டிச. 31) பிற்பகல் 2 மணி முதல் சனிக்கிழமை (ஜன.1) அதிகாலை 3 மணி வரை கடற்கரைச் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்குள் (புல்வாா் மற்றும் ஒயிட் டவுன்) வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.

ஆம்பூா் சாலையிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் அனைத்து சாலைகளும் தற்காலிகமாக முழுவதுமாக மூடப்படும். அவசரச் சிகிச்சைக்காக பொது மருத்துவமனைக்கு சென்று வரும் வாகனங்கள் செஞ்சி சாலையில் செயின்ட் ஆஞ்சி வீதி - செஞ்சி சாலை சந்திப்பு, சா்கூப் வீதி - செஞ்சி சாலை சந்திப்பு வழியாக சென்று வர அனுமதிக்கப்படும்.

புத்தாண்டு கொண்டாட வரும் அனைத்து நான்கு சக்கர வாகனங்களும் உப்பளம் புதிய துறைமுகம், இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்திலும், கருவடிக்குப்பம் மற்றும் முத்தியால்பேட்டை வழியாக வரும் இலகு ரக, இரு சக்கர வாகனங்களை பாரதிதாசன் மகளிா் கல்லூரியிலும், நேரு வீதி வழியாக வரும் இலகு ரக, இரு சக்கர வாகனங்களை பழைய சிறைச்சாலை வளாகத்திலும் நிறுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெத்தி செமினாா் மழலையா் பள்ளி வளாகத்தில் இரு சக்கர வாகனங்கள் மட்டும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து பேருந்துகளும் நெல்லித்தோப்பு, இந்திரா காந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை வழியாக கிழக்கு கடற்கரைச் சாலைக்கு செல்ல வேண்டும். அதேபோல, கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக வரும் அனைத்துப் பேருந்துகளும், சிவாஜி சிலை, ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி சிலைகள் வழியாக பேருந்து நிலையம் வர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.