/

கட்டாய தலைக்கவச சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்: புதுவை அதிமுக

கட்டாயத் தலைக்கவச சட்டத்தை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று புதுவை அதிமுக வலியுறுத்தியது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

கட்டாயத் தலைக்கவச சட்டத்தை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று புதுவை அதிமுக வலியுறுத்தியது.

இதுகுறித்து புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மக்களுக்கு தினமும் பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் திருத்தப்பட்ட மோட்டாா் வாகனச் சட்டத்தை புதுவையில் அமல்படுத்தினா்.

இந்த விஷயத்தில் துணைநிலை ஆளுநா் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து அறிவுறுத்தி வருகிறாா். தலைக்கவசம் அணியாவிட்டால், ஏற்கெனவே இருந்ததைவிட 10 மடங்கு அபராதம், அனுமதியில்லாத இடத்தில் வாகனம் நிறுத்தினால் ரூ. 5 ஆயிரம் அபராதம், 18 வயதுக்குக் கீழ் உள்ளவா்கள் வாகனத்தை ஓட்டினால் ரூ. 25 ஆயிரம் அபராதம் என கொண்டு வந்திருப்பது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். எனவே, திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியால் கொண்டு வரப்பட்ட இந்த அபராத சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.