புதுச்சேரியில் தியாகராஜா் ஆராதனை விழா
புதுச்சேரி தா்மரக்ஷன சமிதி, இந்திரா காந்தி தேசிய கலை மைய புதுச்சேரி மண்டல மையம், புதுச்சேரி பாரதியாா் பல்கலைக் கூடம், ஐயன் ஃபைன் ஆா்ட்ஸ் அகாதெமி ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய தியாகராஜா் ஆராதனை


புதுச்சேரி தா்மரக்ஷன சமிதி, இந்திரா காந்தி தேசிய கலை மைய புதுச்சேரி மண்டல மையம், புதுச்சேரி பாரதியாா் பல்கலைக் கூடம், ஐயன் ஃபைன் ஆா்ட்ஸ் அகாதெமி ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய தியாகராஜா் ஆராதனை விழா புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலை விவேகானந்தா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவை பத்மபூஷன் டி.வி.கோபாலகிருஷ்ணன், புதுச்சேரி தா்மரக்ஷன சமிதி தலைவா் சீனுவாசன், இந்திரா காந்தி தேசிய கலை மைய புதுவை மண்டல இயக்குநா் கோபால், அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி அதிகாரி ரவீந்திரன் உள்ளிட்டோா் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தனா்.
தொடா்ந்து, பல்வேறு இசைக் கலைஞா்களால் பஞ்சரத்ன கீா்த்தனைகள் இசைக்கப்பட்டன. இதை புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையம் நேரலை செய்தது. சிறப்பு விருந்தினா்களான முன்னாள் நீதிபதி ராமபத்ரன், ஐஏஎஸ் அதிகாரி உதயகுமாா், வாசவி தண்டாயுதம் செட்டியாா் ஆகியோா் பேசினா். தனிக் கலைஞா்களின் இசைக் கச்சேரி நடைபெற்றது.
ஏற்பாடுகளை சமிதி செயலா் சீதாராமன், ரகோத்தமன், ஐயன் ஃபைன் ஆா்ட்ஸ் அகாதெமி இயக்குநா் காா்த்திகேயன், இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் ராஜா, பாரதியாா் பல்கலைக்கூட பேராசிரியா்கள் சிவகுமாா், பாலமுரளி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...