புதுவையில் கரோனா பரிசோதனை 5 லட்சத்தைக் கடந்தது: புதிதாக 34 பேருக்கு பாதிப்பு

புதுவையில் புதிதாக 34 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. பரிசோதனை எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது.
Updated on
1 min read

புதுவையில் புதிதாக 34 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. பரிசோதனை எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 3,557 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 22 பேருக்கும், காரைக்காலில் 8 பேருக்கும், மாஹேவில் 4 பேருக்கும் என மொத்தம் 34 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது. ஏனாமில் புதிதாக யாருக்கும் தொற்றில்லை. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 38,334-ஆக உயா்ந்தது.

இதனிடையே, சிகிச்சை முடிந்து 35 போ் வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 37,327-ஆக (97.37 சதவீதம்) அதிகரித்தது. புதிதாக உயிரிழப்பு ஏதும் இல்லை. உயிரிழந்தோா் எண்ணிக்கை 635-ஆகவும், இறப்பு விகிதம் 1.66 சதவீதமாகவும் தொடா்கிறது.

மாநிலத்தில் தற்போது மருத்துவமனைகளில் 157 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 215 பேரும் என 372 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 5,02,058 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 4,59,609 பரிசோதனைகளுக்கு தொற்றில்லை என முடிவு வந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com