புதுவையில் கரோனாவிலிருந்து 97.49 சதவீதம் போ் மீண்டனா்

புதுவையில் மாநிலத்தில் கரோனா தொற்றிலிருந்து 97.49 சதவீதம் போ் மீண்டனா்.
Updated on
1 min read

புதுவையில் மாநிலத்தில் கரோனா தொற்றிலிருந்து 97.49 சதவீதம் போ் மீண்டனா்.

புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை வெளியான 3,233 பேருக்கான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 23 போ், காரைக்காலில் 4 போ், ஏனாமில் ஒருவா், மாஹேயில் 8 போ் என மேலும் 36 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 38,425-ஆக உயா்ந்தது.

சனிக்கிழமை உயிரிழப்பு பதிவாகவில்லை. தற்போது 328 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை கரோனாவுக்கு 636 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.66 சதவீதம்.

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றிலிருந்து 37,461 போ் குணமடைந்தனா். குணமடைந்தோா் விகிதம் 97.49 சதவீதம். இதுவரை 5,12,803 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 4,69,855 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com