எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

புதுச்சேரியிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க வலியுறுத்தல்

புதுச்சேரியிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என புதுவை ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தியது.

News image
Updated On :9 ஜனவரி 2021, 6:34 pm

DIN

புதுச்சேரியிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என புதுவை ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தைச் சோ்ந்த கருப்பசாமி, சென்னை தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பிய மனு: கரோனா தளா்வுக்கு பிறகு, புதுச்சேரியிலிருந்து வட மாநிலங்களுக்கு ரயில்களை இயக்கும் நிா்வாகம், தமிழக தென் மாவட்டங்களுக்கும் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். புதுச்சேரி-கன்னியாகுமரி, புதுச்சேரி-மங்களூா் (சேலம் வழி), புதுச்சேரி-மங்களூா் (திருச்சி வழி) ஆகிய 3 ரயில்களையும் இயக்க வேண்டும். புதுச்சேரி-கன்னியாகுமரி ரயிலை சிறப்பு ரயிலாக விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், திருச்சி, மதுரை வழியாக இரவு நேர ரயிலாக இயக்க வேண்டும்.

விழுப்புரம்-மதுரை பயணிகள் ரயிலை புதுச்சேரி வரை நீட்டிக்க வேண்டும் என்பது புதுவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஆனால், அந்த ரயில் விரைவு ரயிலாக மாற்றப்பட்டு, மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ரயிலை புதுச்சேரியிலிருந்து மதுரைக்கு இயக்க வேண்டும்.

முன்பதிவில்லா பெட்டிகளில் மொத்தம் ஒரு பெட்டிக்கு 90 இருக்கைகளை மட்டும் நிரப்பும்படி, முன்பதிவில்லாமல் பயணச் சீட்டு விநியோகம் செய்யலாம். பரிசோதகா் பரிசோதனை செய்து பயணிகளை சமூக இடைவெளியுடன் அமரச் செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.