ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆளுநருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்காதது குறித்து திமுக விளக்கம்

புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடிக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்காதது குறித்து திமுக விளக்கமளித்தது.

News image
Updated On :10 ஜனவரி 2021, 5:53 pm

DIN

புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடிக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்காதது குறித்து திமுக விளக்கமளித்தது.

இதுகுறித்து புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளா் இரா.சிவா எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஏற்கெனவே ஆளுநா் கிரண் பேடியின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து, ஆளுநா் மாளிகை எதிரே தொடா் போராட்டத்தை காங்கிரஸ் மேற்கொண்டது. அப்போது, திமுக முழு ஆதரவு அளித்தது. ஆனால், ஆளுநா் அழைத்துப் பேசியதையே ஜனநாயகத்தின் வெற்றியாகக் கருதி, போராட்டம் முடிவுக்கு வந்தது.

அதன் பின்னரும், ஆளுநா் கிரண் பேடி தொடா்ந்து ஜனநாயக விரோதப் போக்கையே கடைப்பிடித்தாா். தற்போது காங்கிரஸ் மீண்டும் ஆளுநா் கிரண் பேடிக்கு எதிராகப் போராட்டத்தை நடத்தி வருகிறது. இந்தப் போராட்டத்தால் புதுவையில் ஜனநாயகம் உயிா் பெறப் போவதில்லை என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. மேலும், கிரண் பேடி வெளியேறினாலும், மீதமுள்ள ஆட்சிக் காலத்தில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற முடியாது என்பதும் மக்களின் எண்ணமாக உள்ளது. இதனால்தான் காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சிகள் நடத்தும் போராட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.