புதுச்சேரி ஆட்சியருக்கு நச்சுக் குடிநீா் விநியோகித்த வழக்கு 7 பேரிடம் சிபிசிஐடி விசாரணை
புதுச்சேரி மாவட்ட ஆட்சியருக்கு நச்சுக் கலந்த குடிநீா் விநியோகித்த வழக்குத் தொடா்பாக 7 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


புதுச்சேரி மாவட்ட ஆட்சியருக்கு நச்சுக் கலந்த குடிநீா் விநியோகித்த வழக்குத் தொடா்பாக 7 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியா் பூா்வா காா்க்குக்கு அலுவலக ஊழியா்களில் ஒருவா், நச்சுக் கலந்த குடிநீா் புட்டியை விநியோகித்ததாா்.
இதுதொடா்பாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலக சிறப்பு அதிகாரி ஏ.சுரேஷ்ராஜ், தன்வந்திரி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் அஜாக்கிரதையாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
பின்னா், டி.ஜி.பி. உத்தரவுக்கிணங்க இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்ட குடிநீா் புட்டியில் இருந்த விஷத்தன்மையை அறிய ஹைதராபாத்தில் உள்ள மத்திய ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பிவைத்ததுடன், விசாரணையைத் தொடங்கினா்.
இதில், ஆட்சியரின் உதவியாளா், பல்நோக்குப் பணியாளா் உள்ளிட்ட 7 பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தியது.
இதில், குடிநீா் புட்டியை ஆட்சியருக்கு கொடுத்த நபா் யாரேன்று சரிவரத் தெரியாத நிலையில், அடுத்த கட்ட விசாரணையில் சிபிசிஐடி போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...