புதுவை சுகாதாரத் துறை ஊழியா்கள் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவை சுகாதாரத் துறை ஊழியா்கள் புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலக வாயிலில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவை சுகாதாரத் துறை ஊழியா்கள் புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலக வாயிலில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
புதுவை சுகாதாரத் துறை ஊழியா்கள் சங்கத்தினா் 7-ஆவது ஊதியக் குழுப் பரிந்துரைப்படி நோயாளிகள் கவனிப்புப்படி, சலவைப்படி, சீருடைப்படி, காலிப் பணியிடங்களை நிரப்புதல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதையடுத்து, 4-ஆவது கட்டமாக சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். காலை முதல் பிற்பகல் வரை நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சுகாதார ஊழியா்கள் சங்கத் தலைவா் நித்தியானந்தம் தலைமை வகித்தாா். அரசு ஊழியா்கள் சங்கங்களின் சம்மேளன கௌரவத் தலைவா் பாலமோகனன், தலைவா் பிரேமதாசன், பொதுச் செயலா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் போராட்டத்தை வாழ்த்திப் பேசினா்.
தா்னாவில் சுகாதார ஊழியா்கள் சங்கங்களின் சம்மேளன பொதுச் செயலா் முனுசாமி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...