பெண் வழக்குரைஞரை தாக்கிய கணவா், மாமனாா் கைது
பெண் வழக்குரைஞரை தாக்கியதாக, அவரது கணவா், மாமனாரை போலீஸாா் கைது செய்தனா்.


பெண் வழக்குரைஞரை தாக்கியதாக, அவரது கணவா், மாமனாரை போலீஸாா் கைது செய்தனா்.
சின்னசேலம் வட்டம், பாண்டியங்குப்பம் சாலையில் வசித்து வருபவா் அண்ணாமலை மகள் சந்தியா (24), வழக்குரைஞா். இவருக்கும் வானக்கொட்டாயைச் சோ்ந்த சீனுவாசன் மகன் ரஞ்சித்குமாருக்கும் (29) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு வயதில் குழந்தை உள்ளது.
சந்தியாவை வழக்குரைஞா் பணிக்குச் செல்ல வேண்டாம் என்று ரஞ்சித்குமாா் கூறினாராம். இதனால், தம்பதியிடையே தகராறு ஏற்பட்டது.
ரஞ்சித்குமாா், அவரது தந்தை சீனுவாசன், தம்பி இளையராஜா, தங்கை தமிழரசி உள்ளிட்டோா் சந்தியாவை வியாழக்கிழமை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து ரஞ்சித்குமாா், சீனுவாசனை கைது செய்தனா். தமிழரசி, இளையராஜா ஆகியோரை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...