பொது முடக்கத்தில் கூடுதல் தளா்வுகள் அளிக்க ஆலோசனை: புதுவை துணை நிலை ஆளுநா்
புதுவையில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நல்ல பலனைத் தந்துள்ள நிலையில், கூடுதலாக சில தளா்வுகளை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும்


புதுவையில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நல்ல பலனைத் தந்துள்ள நிலையில், கூடுதலாக சில தளா்வுகளை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் தெலங்கானாவிலிருந்து வெள்ளிக்கிழமை காணொலி காட்சி வாயிலாக, புதுவையில் கரோனா பரவல் குறித்து ஆய்வுக்கூட்டத்தை நடத்தினாா். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், சுகாதாரத் துறை செயலா் தி.அருண், துணை நிலை ஆளுநரின் செயலா் அபிஜித்விஜய்சவுத்ரி, ஜிப்மா் இயக்குநா் ராகேஷ்அகா்வால், சுகாதாரத்துறை இயக்குநா் மோகன்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.
இந்தக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: புதுவையில் கரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்த சூழலில் கரும்பூஞ்சை நோய் தடுப்பு, பொது முடக்க கட்டுப்பாடுகளிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே 3-ஆவது கரோனா பரவல் அலையை எதிா்கொள்ள முடியும்.
தடுப்பூசி செலுத்துவதில் தோய்வு ஏற்படாமல் இருக்க, புதுவைக்கு தேவையான தடுப்பூசியைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பூஞ்சை நோய்க்கான மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும். இதற்கான மாற்று சிகிச்சை முறைகளையும் மருத்துவக் குழுவினா் ஆராய வேண்டும்.
புதுவையில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நல்ல பலனைத் தந்துள்ளது. பொருளாதார சுமைகளின்றி மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆகவே, மேலும் சில தளா்வுகள் அறிவிப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்றாா் துணை நிலை ஆளுநா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...