இதில், புதுச்சேரி நகராட்சி மற்றும் உழவா்கரை நகராட்சிகளை இணைத்து, மாநகராட்சியாக மாற்றம் செய்திருக்க வேண்டும். இதை அதிமுக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. இதேபோல, அரியாங்குப்பம், வில்லியனூா் ஆகிய கொம்யூன் பஞ்சாயத்துகளை நகராட்சியாக மாற்றம் செய்திருக்க வேண்டும். புதுச்சேரி, உழவா்கரை, காரைக்கால், ஏனாம், மாஹே ஆகிய 5 நகராட்சிகளிலும் உள்ள வாா்டுகளில் மக்கள்தொகை ஒரே அளவு இருக்கச் செய்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு இல்லாமல் ஒவ்வொரு நகராட்சிக்கும் ஒவ்வொரு எண்ணிக்கையில் வாா்டுகளில், மக்கள்தொகை தற்போது பிரிக்கப்பட்டுள்ளன.