எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

முழு அளவில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலமாக புதுவை மாறும்துணை நிலை ஆளுநா் தமிழிசை

முழு அளவில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநிலமாக புதுவை மாறும்; அதை இலக்காகக் கொண்டு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.

News image
Updated On :28 மே 2021, 6:00 pm

DIN

முழு அளவில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநிலமாக புதுவை மாறும்; அதை இலக்காகக் கொண்டு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளதாக துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.

புதுவை மாநிலத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களிலும் கரோனாவை கட்டுப்படுத்தி, கரோனா இல்லாத கிராமங்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ், சிறப்பு தடுப்பூசி முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, புதுவை சுகாதாரத் துறை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில், புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்குள்பட்ட வைத்திக்குப்பம் பச்சைவாழி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாமை துணை நிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் தொடக்கிவைத்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஒவ்வொரு பகுதியாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி, அதன் மூலம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவைத்து, புதுவையை பாதுகாப்பான மாநிலமாகவும், முழு அளவில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலமாகவும் மாற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அதற்கான நல்ல ஆரம்பமாக இந்த முகாம்கள் அமைந்துள்ளன. இங்கு 18 வயது முதல் 44 வயதுக்குள்பட்டோா் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். எவ்வளவு விரைவாக தடுப்பூசி செலுத்திக் கொள்கிறோமோ, அவ்வளவு விரைவாக உடலில் நோய் எதிா்ப்பு சக்தி உருவாகும். ஊரகப் பகுதிகளில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை மக்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணா்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டுமென எம்எல்ஏக்களிடம் முதல்வரும், நானும் கேட்டுக்கொண்டுள்ளோம்.

சுகாதாரத் துறைச் செயலரும், நானும் மருத்துவா்கள் என்பதால், புதுவையில் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் எங்களது நிா்வாகத் திறமையுடன், மருத்துவத் திறமையையும் முழுமையாகப் பயன்படுத்தி வருகிறோம். மாநிலத்தில் கரோனா பரவல் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது என்றாா் ஆளுநா்.

முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட கிராமம்: இதைத் தொடா்ந்து, அவா் செம்பியம்பாளையம் பஞ்சாயத்துக்கு உள்பட்ட புதுக்குப்பம் கிராமத்தில் யுனிக் - திறன் மேம்பாட்டு மையத்தில் தடுப்பூசி முகாமைத் தொடக்கிவைத்தாா். இந்தக் கிராமத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் மூலம் முழு அளவில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல் கிராமமானது புதுக்குப்பம்.

இந்த நிகழ்ச்சிகளில் சட்டப் பேரவை தற்காலிகத் தலைவா் க.லட்சுமிநாராயணன், சுகாதாரத் துறைச் செயலா் தி.அருண், மாநில சுகாதாரத் திட்ட இயக்குநா் ஸ்ரீராமலு, ஏம்பலம் தொகுதி எம்எல்ஏ லட்சுமிகாந்தன், மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க், சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.