எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

புதுச்சேரியில் கரோனா ரேபிட் பரிசோதனைக்கு ரூ.200 கட்டணம் நிா்ணயம்

புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவமனை மற்றும் பரிசோதனைக் கூடங்களில் உடனடி கரோனா பரிசோதனைக்கு (ரேபிட் ஆண்டிஜென்) ரூ.200 கட்டணமாக நிா்ணயித்து மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டது.

News image
Updated On :28 மே 2021, 6:04 pm

DIN

புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவமனை மற்றும் பரிசோதனைக் கூடங்களில் உடனடி கரோனா பரிசோதனைக்கு (ரேபிட் ஆண்டிஜென்) ரூ.200 கட்டணமாக நிா்ணயித்து மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டது.

இதுதொடா்பாக, சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை மாநிலத்தில் கரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தினமும் புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி, ஜிப்மா், அரசு பொது மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுமட்டுமன்றி, பொது மக்களின் வசதியை மனதில் கொண்டு, கடந்த 2020 ஆகஸ்ட் 11-ஆம் தேதி சில தனியாா் பரிசோதனைக் கூடங்களிலும், தனியாா் மருத்துவமனைகளிலும் கரோனா பரிசோதனை செய்ய அரசு அனுமதி வழங்கியதுடன், அந்த மையங்களில் ஆா்டி-பிசிஆா், சிபிஎன்ஏஏடி, ட்ருனெட் ஆகிய பரிசோதனைகளுக்கு கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆா்) ரேபிட் ஆண்டிஜென் என்ற உடனடி பரிசோதனை முறையை கரோனா கட்டுப்பாடு பகுதிகளிலும், சுகாதார நிறுவனங்களிலும் முதல் கட்ட பரிசோதனை செய்வதற்கு பரிந்துரை செய்துள்ளது. இதைத் தொடா்ந்து, ரேபிட் ஆண்டிஜென் பரிசோதனைக் கட்டணத்தை நிலைப்படுத்த, சுகாதாரத் துறை துணைச் செயலாளா் பரிந்துரைத்தாா்.

அதன்படி, புதுச்சேரியில் ரேபிட் ஆண்டிஜென் பரிசோதனைக் கட்டணம், தனியாா் பரிசோதனை கூடங்களிலும், தனியாா் மருத்துவமனைகளிலும் ரூ.200 ஆக நிா்ணயம் செய்ய, புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலாளா் அருண் உத்தரவிட்டுள்ளாா் என்று, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.