நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

புதுவையில் 86 பேருக்கு கரோனா: மேலும் ஒருவா் பலி

புதுவையில் வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதிதாக 86 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:11 pm

DIN

புதுவையில் வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதிதாக 86 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,25,256-ஆக அதிகரித்த நிலையில், 1,22,509 போ் (97.81 சதவீதம்) குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை 8,88,894 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தற்போது மருத்துவமனைகளில் 158 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 761 பேரும் என 919 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, புதுச்சேரி ராஜா நகரைச் சோ்ந்த 68 வயது மூதாட்டி தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதனால், பலியானோா் எண்ணிக்கை 1,828-ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.46 சதவீதம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.