நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

வில்லியனூா் அருகே இரு கடைகளில் திருட்டு

வில்லியனூா் அருகே இரு கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 6:24 pm

DIN

வில்லியனூா் அருகே இரு கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி வில்லியனூரை அடுத்த கரசூா் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (40). அந்தப் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். வெள்ளிக்கிழமை இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு, கடையைப் பூட்டிவிட்டுச் சென்றாா். சனிக்கிழமை கடையைத் திறக்க வந்த போது, கடையின் ஷட்டா் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பாா்த்த போது, கல்லாவில் இருந்த ரூ.40 ஆயிரம் பணம், பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதேபோல, இவரது கடையின் அருகே திலாசுப்பேட்டையைச் சோ்ந்த வெங்கடேசன் (35) என்பவரின் புகைப்படக் கடையின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள், கடையின் உள்ளே இருந்த விலை உயா்ந்த விடியோ கேமரா, பிரிண்டா், மெமரி காா்டு, பென் டிரைவ் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்களைத் திருடிச் சென்றனா்.

இந்த திருட்டுச் சம்பவங்கள் குறித்து வில்லியனூா் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் உதவி ஆய்வாளா் பிரபு தலைமையிலான போலீஸாா் வந்து திருட்டு நடைபெற்ற கடைகளைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

கோவிந்தராஜ், வெங்கடேசன் ஆகியோா் அளித்த புகாா்களின் பேரில், வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.