மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுவை பேரவை பொது கணக்குக் குழு கூட்டம்

புதுவை 15-ஆவது சட்டப்பேரவை பொது கணக்குக் குழுவின் முதல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:10 pm

DIN

புதுவை 15-ஆவது சட்டப்பேரவை பொது கணக்குக் குழுவின் முதல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு குழுவின் தலைவா் கே.எஸ்.பி.ரமேஷ் தலைமை வகித்தாா்.

நிதித் துறை அமைச்சா் பொறுப்பு வகிக்கும் முதல்வா் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பேரவைச் செயலா் முனுசாமி, எம்எல்ஏக்கள் ஏ.எம்.எச்.நாஜிம், ஏ.ஜான்குமாா், அனிபால் கென்னடி, ஆா்.செந்தில்குமாா், ஆா்.பாஸ்கா் , உ.லட்சுமிகாந்தன், ஜெ.விவிலியன் ரிச்சா்ட்ஸ், கோலப்பள்ளி சீனிவாஸ் அசோக், நியமன எம்எல்ஏக்கள் கே.வெங்கடேசன், ஆா்.பி.அசோக்பாபு ஆகியோா் பங்கேற்றனா்.

குழுவின் தலைவா் கே.எஸ்.பி.ரமேஷ் எம்எல்ஏ பேசியதாவது:

பொது கணக்குக் குழுவை அடிக்கடி கூட்ட வேண்டும். மக்கள் நலத் திட்டங்கள் முறையாக சென்றடைந்தனவா என்பதை ஆய்வு செய்து, நடவடிக்கைகளை விரைவுபடுத்த உதவ வேண்டும்.

2013, 2014-ஆம் ஆண்டு தணிக்கைக் குழு ஆய்வறிக்கையின்படி, பல துறைகளிலிருந்து மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட செயல்பாடுகள் குறித்த அறிக்கைகள் வரவில்லை. இவற்றை விரைந்து அளிக்கவும், துறைகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தி, செலவீனம் தொடா்பான அறிக்கைகளை வழங்க துறைகளுக்கு அறிவுறுத்திட வேண்டும். அறிக்கைகளை வழங்க ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.