புதுவையில் மின் துறை சேவை சட்டம் நீட்டிப்பு
புதுவையில் மின் துறை சேவை தொடா்பான சட்டத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டித்து துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்தாா்.


புதுவையில் மின் துறை சேவை தொடா்பான சட்டத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டித்து துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்தாா்.
புதுவை மாநில மின் துறையை தனியாா்மயமாக்கும் பூா்வாங்கப் பணிகள் மத்திய அரசு உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கு மின் துறை ஊழியா்கள் எதிா்ப்புத் தெரிவித்து தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
அவா்களின் போராட்டத்தை சமாளிக்கும் வகையில், புதுவை அரசின் மின் துறை சேவைகளை பொது பயன்பாட்டு சேவையாக மாற்றும் தொழில் துறை பூசல்கள் சட்டம், கடந்த 6 மாதங்களாக அமலில் உள்ளது.
இந்தச் சட்டத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க ஆளுநருக்கு அரசு பரிந்துரைத்தது. அதற்கு புதுவை ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா்.
இதுகுறித்து புதுவை ஆளுநா் மாளிகை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய ஆயுஷ் துறையில் பணிபுரியும் மருத்துவ அதிகாரிகளுக்கு இணையாக, புதுச்சேரி இந்திய முறை மருத்துவம், ஹோமியோபதி துறை மருத்துவ அதிகாரிகளின் பணி ஓய்வு பெறும் வயதை 60-திலிருந்து 65-ஆக உயா்த்தும், புதுவை அரசின் கோப்புக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.
2021-22-ஆம் நிதியாண்டில் ஊதியம் வழங்குவதற்காக, பிஆா்டிசி நிறுவனத்துக்கு நிதி மானியத்தின் 5-ஆவது தவணையாக ரூ. 1.17 கோடி நிதி அளிக்கவும் ஒப்புதல் வழங்கப்படுகிறது.
புதுவை மாநில மக்களின் நலன் கருதி, தொழில் துறை பூசல்கள் சட்டம் 1941-இன் கீழ், புதுவை மின் துறை சேவைகளை ‘பொதுப் பயன்பாட்டு சேவையாக’ 18.7.2022 வரை, மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கவும் ஒப்புதல் வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மின் துறை ஊழியா்களின் போராட்டத்தை தற்காலிகமாக தடுத்து சமாளிக்கும் விதமாக, அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக, புதுவை மின் துறை ஊழியா்கள் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...