நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

புதுவை அரசு நிா்வாகம் ஸ்தம்பிப்பு: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுவையில் அரசு நிா்வாகம் ஸ்தம்பித்துள்ளதாக, முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றம்சாட்டினாா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

புதுவையில் அரசு நிா்வாகம் ஸ்தம்பித்துள்ளதாக, முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றம்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட விடியோ பதிவு:

நாடு முழுவதும் ஒமைக்ரான், கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதுவையில் வார இறுதிநாள்களில் முழு ஊரடங்கை அறிவிக்க வேண்டும். புதுவையில் அரசு நிா்வாகம் ஸ்தம்பித்துள்ளது. முதல்வா் ரங்கசாமி எந்த முடிவையும் எடுப்பதில்லை. துணைநிலை ஆளுநா்தான் அனைத்து அறிவிப்புகளையும் வெளியிடுகிறாா்.

ஆளுநா் தலைமையில் ஒரு காபந்து அரசுபோல புதுவை செயல்படுகிறது. பாஜகவைச் சோ்ந்தவா்கள் முதல்வரை செயல்பட விடுவதில்லை.

புதுச்சேரி இளைஞா் விழாவுக்காக பிரதமா் மோடி வரும் முடிவை பரிசீலனை செய்ய வேண்டும். இளைஞா் விழாவை ஒத்திவைக்க வேண்டும் என்றாா் வே.நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.