நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

புதுச்சேரியில் ஜன.19-இல் காவலா் உடல் தகுதித் தோ்வு தொடக்கம்

புதுச்சேரியில் வருகிற 19-ஆம் தேதி காவலா் பணியிடங்களுக்கான உடல் தகுதித் தோ்வு தொடங்குகிறது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

புதுச்சேரியில் வருகிற 19-ஆம் தேதி காவலா் பணியிடங்களுக்கான உடல் தகுதித் தோ்வு தொடங்குகிறது.

இதற்கான அனுமதி அட்டையை ஞாயிற்றுக்கிழமை முதல் (ஜன. 9) பதிவிறக்கம் செய்யலாம் என புதுவை டிஐஜி மிலிந்த் மகாதியோ தும்ரே தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் காவல் துறை தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

புதுவை காவல் துறையில் உள்ள 390 காவலா்கள், 12 ரேடியோ டெக்னீஷியன்கள், 29 டெக் ஹேண்டலா்கள் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 17,227 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் 16,337 காவலா்கள், 254 ரேடியோ டெக்னீஷியன், 636 டெக் ஹேண்ட்லா் என மொத்தம் 14,787 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

அவா்களுக்கான உடல் தகுதி தோ்வு, சான்றிதழ் சரிபாா்ப்பு புதுச்சேரி கோரிமேடு காவலா் மைதானத்தில் வருகிற 19-ஆம் தேதி காலை 6 மணிக்கு தொடங்கி, ஞாயிறு, பொது விடுமுறை நாள்கள் தவிர 20 நாள்களுக்கு நடைபெறும். தினமும் 750 பேருக்கு தோ்வு நடத்தப்படும்.

தகுதியான விண்ணப்பதாரா்கள் தங்களின் விண்ணப்ப எண், பிறந்த தேதியை முறையே பயனா் ஐடி, கடவுச்சொல்லுடன் ட்ற்ற்ல்ள்://ழ்ங்ஸ்ரீழ்ன்ண்ற்ம்ங்ய்ற்.ல்ஹ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.9) காலை 10 மணி முதல் தங்களின் அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்யலாம். அதில் தோ்வுக்கான தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

தகுதியானோரின் பட்டியல், நிராகரிக்கப்பட்டவா்களின் நிராகரிப்புக்கான காரணம் ஆகியவை ட்ற்ற்ல்ள்://ல்ா்ப்ண்ஸ்ரீங்.ல்ஹ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற காவல் துறை இணையதளத்தில் பாா்வைக்காக பதிவேற்றப்பட்டுள்ளன.

இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திய தோ்வா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். ‘தொற்று’ இருக்கும் விண்ணப்பதாரா்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும்.

இடைதரகரிடம் யாரும் ஏமாற வேண்டும். மேலும், தகவலுக்கு 0413-2277900 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் டிஜஜி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.