புதுவையில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் தொடக்கம்
புதுச்சேரியில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், பூஸ்டர் தடுப்பூசி முகாம் திங்கள் கிழமை தொடங்கியது.


புதுச்சேரியில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், பூஸ்டர் தடுப்பூசி முகாம் திங்கள் கிழமை தொடங்கியது.
புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில், முன்களப் பணியாளர்களுக்கு கரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் முகாமை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அப்போது துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியதாவது: கரோனாவுக்காக இரண்டு தடுப்பூசி செலுத்திய 2 மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
இதுவரை முதல் டோஸ் போடாதவர்கள், இப்போதாவது கட்டாயம் தடுப்பூசி செலுத்துக் கொள்ள வேண்டும். புதுவையில் அரசு ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என கூறியிருந்தோம். தற்போது 5% தான் தடுப்பூசி செலுத்தமால் உள்ளனர். பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்.
புதுவையில் தற்போது கரோனா அதிகரிப்பால் அதிக கட்டுப்பாடுகள் போடுவது குறித்து ஆலோசிக்கப்படும். தற்போதுள்ள சூழலில் ஒமைக்ரான், டெல்டாக்ரான் என அனைத்து தொற்றும் வர வாய்ப்புள்ளது. நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். புதுவையில் கரோனா தொற்று அதிகரித்தால் சிகிச்சை அளிப்பதற்கு படுக்கை வசதிகள் தயாராகவே உள்ளது.
தற்போது வழங்கப்படும் கரோனா பூஸ்டர் தடுப்பூசி ஒரு மிகப்பெரிய நோய்த்தடுப்பு நமக்கு வழங்கும் என்றார். சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...