புதுச்சேரியில் விபத்து: தந்தை கண்முன்னே மகன் பலி

புதுச்சேரியில் மகனை பள்ளிக்கு அழைத்து சென்றபோது பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில்  தந்தை கண்முன்னே மகன் பலியான சம்பவம் நடந்துள்ளது.
புதுச்சேரியில் விபத்து: தந்தை கண்முன்னே மகன் பலி
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் மகனை பள்ளிக்கு அழைத்து சென்றபோது பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில்  தந்தை கண்முன்னே மகன் பலியான சம்பவம் நடந்துள்ளது.

புதுச்சேரி உழவர்கரை பாவணன் நகர் பகுதியை சார்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் கிஷ்வந்த (10), இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் இன்று காலை பன்னிர் செல்வம் தனது மகனை பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது பவழம்சாவடி அருகே வந்துகொண்டிருந்தபோது எதிரே இருசக்கர வாகனம் வந்ததை பார்த்த அவர் வாகனத்தின் வேகத்தை குறைத்துள்ளார். அப்போது அவர் நிலை தடுமாறி தனது மகனுடன் கீழே விழுந்தார். 

அப்போது விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து பின்சக்கரம் பன்னீர்செல்வத்தின் மகன் மீது ஏறி இறங்கியது. 
இதில் 10 வயது பள்ளி மாணவன் கிஷ்வந்த சம்பவ இடத்திலயே பலியானார். சிசிடிவி காட்சிகளை கொண்டு போக்குவரத்து காவல் துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com